“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார். கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார்.

ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. முதன் முறையாக இந்தி நடிகை ஹுயூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: அப்பா 8 அடி பாய்ந்தால் 16 அடி பாயும் பிள்ளை! ஆச்சரியப்படுத்தும் மிரட்டல் லுக்கும் மாறிய விக்ரம் மகன் துருவ்!
 

கொரோனா பிரச்சனை முடியாமல் படப்பிடிப்பை தொடங்க வேண்டாம் என தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் குறித்து, புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: நீச்சல் குளத்தில் குளித்தபடி... புகைப்படம் வெளியிட்டு ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்த மாளவிகா மோகன்!
 

சமீபத்தில், 75 பேருடன் படப்பிடிப்பை துவங்கலாம் என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வலிமை படத்தின் ஷூட்டிங்கை, ஆகஸ்ட் மாதம் துவங்க தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்ட காட்சிகளையும், இந்தியாவிலேயே முடித்திட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த தகவல் உண்மை என்னும் பட்சத்தில், இதுகுறித்து விரைவில் அதிகார பூர்வ தகவலை எதிர்பார்க்கலாம்.