'தல' அஜித்தின் 60வது படம் வலிமை படம் குறித்து ஒரு வருடத்திற்கு மேலாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாக உள்ள 'வலிமை' அப்டேட் குறித்த தகவல் தல ரசிகர்களை மேலும் உற்சாக படுத்தியுள்ளது. 

'தல' அஜித்தின் 60வது படம் வலிமை படம் குறித்து ஒரு வருடத்திற்கு மேலாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாக உள்ள 'வலிமை' அப்டேட் குறித்த தகவல் தல ரசிகர்களை மேலும் உற்சாக படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏற்கனவே இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, 'நேர்கொண்ட பார்வை' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டது. 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார். 

இந்த படத்தின் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தாலும், தமிழ் மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, குறித்து அண்மையில் வெளியான தகவலின் படி, படக்குழு விரைவில்... ஐரோப்பா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், மற்றொரு புறம் அஜித் ரசிகர்களை சந்தோஷ படுத்தும் விதமாக இரண்டு சிங்கிள் பாடல்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். வலிமை படத்தின் டீசர் ரிலீசுக்கு முன்பாக, இந்த 2 சிங்கிள் பாடல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

'தல' அஜித் மதுரையில் ஆடி பாடும் ஓபனிங் பாடலும், ஒரு குடும்ப செண்டிமெண்ட் பாடலையும் படக்குழு வெளியிட உள்ளதாகவும் இதற்கான பணிகளில் தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். ஆயுத பூஜை பண்டிகைக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஒரு சில மாதங்களே இருப்பதால் இனி, வாராவாரம் வலிமை அப்டேட்டை கொடுப்பதென முடிவில் இருக்கிறார்களாம். இந்த தகவலை தல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.