Asianet News Tamil

திடீர் என பிளானை மாற்றுகிறதா வலிமை படக்குழு..? தீயாய் பரவும் தகவல்..!

வலிமை பட சண்டை காட்சியின் பிளானை தற்போது படக்குழு திடீர் என மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
 

valimai movie crew suddenly changing the plan ?
Author
Chennai, First Published Jun 15, 2021, 3:48 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

வலிமை பட சண்டை காட்சியின் பிளானை தற்போது படக்குழு திடீர் என மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்: உச்சகட்ட கவர்ச்சி அவதாரம் எடுத்த மாளவிகா மோகனன்! டாப் ஆங்கிளில் தாறுமாறு கிளாமரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!
 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். இந்நிலையில் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக சுற்றி வருகிறது. 

தல ரசிகர்கள், தற்போது வரை ஏதாவது,வலிமை பட அப்டேட் கிடைக்காதா என காத்திருக்கிறார்கள். இவர்கள் வலிமை பட அப்டேட்டுக்காக  செய்த அட்டகாசங்கள் சொல்லில் அடங்காது, சட்ட சபை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு வந்த நிலையில், ஓவர் நிலையில் பொறுமை இழந்த தல அஜித், நானும் தயாரிப்பாளரும் இணைந்து அப்டேட்டை வெளியிடும் வரை பொறுமை காக்கும் படியும், பொது இடத்தில் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்ளும் படியும் அறிக்கை வெளியிட்டார்.

மேலும் செய்திகள்: 190 நாடுகள்... 17 மொழி... ஒரே சுருளி..! தனுஷின் மாஸான போஸ்டரை வெளியிட்ட 'ஜகமே தந்திரம்' படக்குழு..!
 

எனினும் படகுழுமே அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக தலைதூக்கிய கொரோனா இரண்டாவது அலை காரணமாக, படக்குழு ஃபர்ஸ்ட் லுக் மற்றொரு நாள் வெளியாகும் என தெரிவித்தது. மேலும் படப்பிடிப்பு பணிகள் 95 % சதவீதம் முடிந்து விட்டதாகவும், வெளிநாட்டில் படமாக்க வேண்டிய ஒரே ஒரு சண்டை காட்சி மட்டுமே மீதம் உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: வருமானவரி பிடித்தம்... மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் பட தயாரிப்பாளர்கள் கடிதம்..!
 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'வலிமை' படக்குழுவினர் இந்த குறிப்பிட்ட சண்டை காட்சியை சுஸர்லாந்தில் படமாக்க திட்ட மிட்ட நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்... படக்குழு அந்த காட்சியை டெல்லி மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் செட் அமைத்து எடுக்க திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்து தற்போது வரை எந்த ஒரு, அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதைத்தொடர்ந்து, அஜித்தின் தீவிர ரசிகரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இதில், 'வலிமை' படத்தில் அஜித் சில அவுட் ஸ்டாண்டிங் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து உள்ளதாகவும், ’வலிமை’ படம் அவரது திரையுலகில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு படமாக என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ’வலிமை’ படம் ரசிகர்களை மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு கொண்டுவரும் ஒரு படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் இந்த தகவல் அப்டேட்டுக்காக கார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios