வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் இன்று இரவு 7 மணிக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் காம்பினேஷனில் உருவாகி வருகிறது ‘வலிமை’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். ரசிகர்களின் ஒன்றரை வருட தொடர் வேண்டுகோளுக்குப் பிறகு கடந்த 17ம் தேதி 7 மணிக்கு மோஷன் போஸ்டர் மற்றும் சில ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டிசைன் மற்றும் கிராபிக்ஸில் சில குறைகள் இருந்தாலும் ஒன்றரை வருடத்திற்கு பிறகு அப்டேட் கிடைத்ததே போதும் என தல ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாட ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று காலை வலிமை படம் குறித்த மற்றொரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அதாவது வலிமை படத்தில் இருந்து முதல் பாடலை இன்று இரவு 9 மணி முதல் 10.30க்குள் படக்குழு வெளியிட உள்ளதாக வேறு, வேறு டைம் கூறப்பட்டு வந்தது. 

Scroll to load tweet…

இந்நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் இன்று இரவு 7 மணிக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். எனவே ரசிகர்கள் 7 மணிக்கான கவுண்டனை ஆரம்பித்து ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் படக்குழுவோ ‘வலிமை’ பட பாடலின் முதல் வரியோடு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பாடல் சரியாக 10.45 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். ‘நாங்க வேற மாதிரி’ என தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதில் தல அஜித் செம்ம ஸ்டைலிஷ் அண்ட் எங் லுக்கில் இருப்பதைக் கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இருப்பினும் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிடாமல் வெயிட்டிங்கிலேயே வெறி ஏற வைப்பதால் தல ஃபேன்ஸ் கடுப்பாகியுள்ளனர்.