இந்தப் படத்தையும் 'நேர்கொண்ட பார்வை' தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிப்பது நாம் அறிந்ததே. பரபரக்கும் ஆக்ஷன், திரில்லர் ஜானரில் பக்கா காப் ஸ்டோரியுடன் 'வலிமை' படத்தை உருவாக்கவுள்ளார் ஹெச்.வினோத். 

இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கவுள்ளாராம். கடந்த அக்டோபர் மாதமே படத்திற்கு பூஜை போட்டாலும், ஷுட்டிங் மட்டும் ஆரம்பமாகவில்லை. 'வலிமை' கதையை பட்டை தீட்டுவதற்காக ஹெச்.வினோத், 2 மாத கால அவகாசம் கேட்டிருந்ததாலும், படத்தின் கேரக்டருக்காக தன்னை மாற்றிக்கொள்ள அஜித் தயாராகி வருவதாலும் படத்தின் ஷுட்டிங் தொடங்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. 

இதனால், வலிமை படத்தின் ஷுட்டிங் எப்போது தொடங்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில், வலிமை படத்தின் ஷுட்டிங் மற்றும் ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் வலிமை படத்தின் ஷுட்டிங்கை டிசம்பர் மாத மத்தியில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அத்துடன், படத்தையும் வரும் 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். 

இணையத்தில் வேகமாக பரவிவரும் இந்த செய்தி, தல ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அதற்கு காரணம், 4 வருடத்திற்குப் பின்னர் தீபாவளிக்கு தல தரிசனம் கிடைக்கவுள்ளதுதான். திட்டமிட்டபடி படத்தின் ஷுட்டிங் உட்பட அனைத்தும் நடந்தால், 2020 தீபாவளி 'தல' தீபாவளிதான் என உறுதியாக சொல்லலாம்.