Valimai vs Vijay Fans : 26 ஆயிரத்திற்கு மேற்பட்ட ட்வீட்களை 'வலிமை டிசாஸ்டர்' என்னும் ஹேஷ் டேக்கில் இதுவரை போஸ்ட் செய்யப்பட்டுள்ளது..அஜித் ரசிகர்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... 

போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதிகாலையிலேயே தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் ஆரவாரமாக கொண்டாடினர். 

ஆனால் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வலிமை குறித்த விமர்சனம் தாறுமாறாக வந்து விழுகிறது..ஏற்கனவே கலவை விமர்சனங்களை பெற்றது..இதற்கிடையே விஜய் ரசிகர்கள் வேறு உள்ளே புகுந்து கபடி ஆடி வருகின்றனர்..முன்பு பிகில் ரிலீஸின் போது அஜித் ரசிகர்கள் 'BigilDisater' என்னும் ஹேஷ் டேக்கை ட்ரெண்டாக்கினர் ..அதற்கு பலி வாங்கும் விதமாக தற்போது 'ValimaiDisater' என்கிற ஹேஷ் டேக்கை விஜய் ரசிகர்கள் இதுவரை 26 முறை போஸ்ட் செய்துள்ளனர். அதோடு அவர்களது மீம்ஸுகளும் சோசியல் மீடியாவைதெறிக்கவிட்டு வருகிறது.

வலிமை படத்தை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர்...பிளேடுக்கு பதில் கத்தியால் அறுக்கும் விதமாக படமிருப்பதாக கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…

மக்கள் அட்லியை காப்பி ரைட்டர் என நக்கல் செய்துலோகேஷ் கனகராஜ், நெல்சன், வெற்றிமாறன், எச்.வினோத் ஆகியோரை ஊக்கப்படுத்திய அதே ஆட்கள்! தற்போது வலிமை வால்டர் வெற்றிவேலபோயிருப்பதை என்ன சொல்லுவீர்கள் என குத்தல் கேள்வி கேட்டுள்ளனர்...

Scroll to load tweet…

வடிவேலின் காமெடி காட்சி போட்டோவில் சிவா - வினோத் இருப்பது போன்று மாஃபிங் செய்து வலிமையை விட விஸ்வாசம் தேவலாம் என விஜய் ரசிகர்களை சொல்ல வைத்து விட்டாயே வினோத் என பங்கமாக கலாய்த்து உள்ளனர்...

Scroll to load tweet…

அதற்கு மேலும் வலிமை திரையரங்கில் படுத்தபடி ரசிகர்கள் படத்தை பார்க்கும் காட்சியை மிக மோசமாக சித்தரித்துள்ளனர்..

Scroll to load tweet…