'மாஸ்டர்' படத்தை பார்த்து விட்டு, தல-யை வைத்து, 'வலிமை' படம் இயக்கி வரும், எச்.வினோத் தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
'மாஸ்டர்' படத்தை பார்த்து விட்டு, தல-யை வைத்து, 'வலிமை' படம் இயக்கி வரும், எச்.வினோத் தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது. முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதன் பின்னர் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

ஆனால் முதல் மூன்று நாட்களிலேயே வசூலில் தட்டித்தூக்கிய மாஸ்டர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது. ஒரே வாரத்தில், “மாஸ்டர்” திரைப்படம் உலக அளவில் அதிக செய்த படம் என்கிற பெருமையை பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தை தல அஜித்தை வைத்து ஏற்கனவே 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கியவரும், தற்போது 'வலிமை' படத்தை இயக்கி வருபவருமான எச்.வினோத் பார்த்து விட்டு தன்னுடைய விமர்சனத்தை கூறி இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

படம் குறித்து அவர், "விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இரு மாஸ் ஹீரோக்களை வைத்து, லோகேஷ் கனகராஜ் சிறப்பாக 'மாஸ்டர்' படத்தை இயக்குள்ளதாக தெரிவித்துள்ளாராம். ஆனால் இப்படி ஒரு தகவல் பரவி வருவது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
