பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காமெடி நடிகர் வையாபுரி, கடந்த சில நாட்களாகவே தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க முடியவில்லை நான் வெளியேற வேண்டும் என கூறி வருகிறார்.

இதனை காரணமாக வைத்து போட்டியாளர்கள் சிலர் இவரது பெயரை நாமினேட் செய்தாலும், மக்களின் ஆதரவால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக நீடித்து வருகிறார். 

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில்... தன்னால் தனி தனியாக அனைவரிடமும் இங்கு சமாளிக்க முடியவில்லை தயவு செய்து வெளியில் என்னை அனுப்பிவிடுமாறு பிக் பாஸ் அறையில் தன்னுடைய கோரிக்கையை வைக்கிறார்.