தமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கவிஞர் வைரமுத்து குறித்து பாடகி சின்மயி பாலியல் ரீதியாக புகார் தெரிவித்தது தான்.  சின்மயி வைரமுத்து மீது புகார் தெரிவித்தது முதல்... பல முகம் தெரியாத பெண்கள் மற்றும் சில பாடகிகள் கூட இவர் மீது பாலியல்  புகார்களை கூறி வருகிறார்கள். 

அதே போல் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் சகோதரி ரெஹானா கூட தன்னிடம் சில இளம் பாடகிகள், வைரமுத்து தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார்கள் என குண்டை தூக்கி போட்டார்.

இந்த பாலியல் சர்ச்சை குறித்த பிரச்சனை வளர்ந்து கொண்டே போக தற்போது முதல் முறையாக இதுநாள் வரை மௌனம் காத்துவந்த பாடாலாசிரியர் மதன் கார்க்கி தனது தந்தைக்கு ஆதரவாக ட்விட்டர் பகுதியில் ஒரு பாடல் வரிகளை வெளியிட்டு தந்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெளிநாட்டு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது வைரமுத்து தன்னிடம் அத்துமீற முயன்றதாக புகார் கூறினார். இதையடுத்து மேலும் சில பெண்களும் வைரமுத்து மீது புகார் கூறினார். சின்மயின் இந்த புகாருக்கு வைரமுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மறுப்பு தெரிவித்ததோடு...  இந்த சர்ச்சை தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். 

மேலும் இந்த விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காண்பேன் என்றும், இது குறித்து தன்னுடைய சட்ட ஆலோசகரிடம் பேசி வருவதாக கூறி இருந்தார். 

பின் சின்மயி மற்றும் அவரது தாயார் தொலைக்காட்சிகளில் தோன்றி இது சம்பந்தமாக மாறி மாறி விளக்கமளித்தனர். வைரமுத்து மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் பாடகி சின்மயி கூறியிருக்கிறார். மேலும் அவர் வெளிநாடு சென்று வந்ததற்கான ஆதாரம் தன்னுடைய பாஸ்போர்ட் என்றும் அதனை தான் தொலைத்து விட்டதாகவும்... தற்போது தேடி வருவதாகவும் கூறி இருந்தார். 

இந்நிலையில் முதல் முறையாக தன்னுடைய தந்தை வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் அவரின் மகன் மதன் கார்க்கி.  தன் தந்தை மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக லிங்கா படத்தில் ரஜினிக்காக வைரமுத்து எழுதிய உண்மை ஒருநாள் வெல்லும் பாடலைப் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பாடலில் வரும் வரிகளான “பொய்கள் புயல்போல் வீசும்- ஆனால் உண்மை மெதுவாய் பேசும்” என்று தனது தந்தைக்கு ஆதரவாக குறிப்பிட்டுள்ளார்.