பிக்பாஸ் போட்டியாளர்கள் இன்று 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழுவினருடன் ஜாலியாக இன்றைய தினத்தை கழிக்க உள்ளனர் என்பது, தொடர்ந்து வெளியாகி வரும் ப்ரோமோவை பார்த்தாலே தெரிகிறது. 

இன்று 'கடைகுட்டி சிங்கம்' படக்குழுவினர் வருவார்கள் என்பதை முன்பே தெரிந்தது போல், அனைத்து போட்டியாளர்களுக்கும் கலக்கலான உடைகளில் உள்ளனர். 

மேலும் தற்போது வெளியாகி உள்ள ஒரு ப்ரோமோவில், நடிகர் கார்த்தி, எல்லோருக்கும் ஒரு பட்ட பெயர் உள்ளதாமே... என கேள்வி எழுப்புகிறார். இதற்கு ஐஸ்வர்யா, வைஷ்ணவியை காட்டி இவருடைய பெயர் 'நாராயண நாராயண' என கூறுகிறார். 

இதனால் மிகவும் கோபமான வைஷ்ணவி ஜனனியிடம் வந்து நான் யாரிடம் நாரதர் வேலை பார்த்தேன், என்னை வேண்டும் என்றே டார்கெட் செய்து இப்படி கூறுகிறார் ஐஸ்வர்யா என கூறுகிறார். இதற்கு ஜனனி நீங்கள் இதை ஐஸ்வர்யாவை தனியாக அழைத்து இனி இப்படி சொல்லவேண்டாம் என கூறினால் அவர் புரிந்துக்கொள்வார் என கூறியும் வைஷ்ணவி வேண்டாம் என கூறும் காட்சி காட்டப்படுகிறது. 

இதனால் எப்படியும் வைஷ்ணவி 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழு வெளியேறியதும் இது குறித்து ஐஸ்வர்யாவிடம் கேட்டு அது பெரிய பிரச்சனையாக வெடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.