நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக, திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு செய்தி குறித்து உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரின் அருமை பெருமைகள் பற்றியும் தனக்கு தெரிந்த வற்றை போட்டியாளர்கள் கூறினர்.

இதனால் வெளியில் மட்டும் அல்ல உள்ளே இருந்த போட்டியாளர்களும் திமுக தலைவரின் மறைவை நினைத்து வருந்தி, அவருக்காக மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதைதொடர்ந்து தற்போது மீண்டும் சண்டை சச்சரவு பிக்பாஸ் வீட்டில் துவங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஆர்.ஜே.வைஷ்ணவி தேம்பி தேம்பி அழுகிறார்.

இவர் பாலாஜி மற்றும் மும்தாஜுடன் பேசும்போது, இந்த வீட்டில் யாருமே 100 சதவீதம் நேர்மை இல்லை என்று கூறுகிறார். இதை மும்தாஜ் கேட்டதும் இதை இப்படி நீ முடிவு செய்யலாம் என கேள்வி எழுப்புகிறார். 

இதற்கு பதில் கொடுக்கும் வைஷ்ணவி, வாழ்க்கையில் யாரும் தன்னை இந்த அளவிற்கு மட்டம் தட்டியது இல்லை, என்னுடைய குணாதிசயத்தை எவ்வளவு உதாசீன படுத்தி இருக்கிறார்கள் என்பது தனக்கு தான் தெரியும் என தேம்பி தேம்பி அழுகிறார். பின் சொடக்கு போட்டு இங்கு இருக்கும் அனைவரையும் பிச்சி பிச்சி தின்னுவேன் அண்ணே... ஆட்ட பிரிக்குற மாதிரி மாட்ட பிரிக்கிற மாதிரி ஒன்னு ஒண்ணுத்தையும் பிரிச்சி காட்டுற எனக்கு அந்த தகுதி இருக்கு என கூறுகிறார்.

இவர் இப்படி கூறுவதால், ஏதேனும் சர்ச்சை வெடிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.