Asianet News TamilAsianet News Tamil

வைரமுத்துவின் டாக்டர் பட்டத்திற்கு ஆப்பு வைத்த சின்மயி... வேதனையை வெளியே காட்டாமல் கவிப்பேரரசு போட்ட ட்வீட்...!

தனக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்

Vairamuthu Posted Twitter Regarding Doctorate Function
Author
Chennai, First Published Dec 31, 2019, 3:10 PM IST

கடந்த வாரம் தனியார் பல்கலைக்கழகம் சார்பில் வைரமுத்துவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த பட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குவதாக இருந்தது. இந்நிலையில் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை நினைவுபடுத்தி சின்மயி பதிவிட்ட டுவிட்டருக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். 

Vairamuthu Posted Twitter Regarding Doctorate Function

மேலும் ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சை கருத்து கூறியதையும் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக பாஜகவினர் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பட்டமளிப்பு விழாவை மத்திய அமைச்சர் ராஜ்நாத் ரத்து செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய அழைப்பிதழ் அச்சிடப்பட்டது. அதில் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவது குறித்த அறிவிப்பு நீக்கப்பட்டது. வேறு ஒரு சிறப்பு விருந்தினரை வைத்து மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. 

Vairamuthu Posted Twitter Regarding Doctorate Function

இதையடுத்து கவிஞர் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ரத்து செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், "எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள  தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி. 
இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...?" என்று குறிப்பிட்டுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios