vairamuthu give the 5 laks for harward tamil seat

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையா பெற்றுக்கொண்டார். 

சென்னை லீ மெரிடியன் விடுதியில் நடந்த இவ்விழாவில் கவிஞர்கள் வா.மு.சேதுராமன், முத்துலிங்கம், அறிவுமதி, மனுஷ்யபுத்திரன், மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து, உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். 

சமீபத்தில் ஆண்டாள் நாச்சியார் பற்றி, தவறாக பேசியதற்கு கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தது. இந்த சர்ச்சைக்காக அனைவரிடமும் மனதார மன்னிப்புக் கோரிய வைரமுத்து. தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அப்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தமிழ் இருக்கைக்காக அவருடைய சார்பாக 5 லட்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்காக நடிகர் விஷால், எ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.