Asianet News TamilAsianet News Tamil

நான் நல்லவரா... கெட்டவரா...? யாரும் முடிவு செய்ய வேண்டாம்! பாலியல் குற்றம் குறித்து பேசிய வைரமுத்து!

பிரபல கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ என, பாதிக்கப்பட்ட ஒரு பெண் பத்திரிக்கையாளர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததுதான் தற்போது தமிழகத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

vairamuthu about  chimayi harrasment complient
Author
Chennai, First Published Oct 14, 2018, 2:06 PM IST

பிரபல கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ என, பாதிக்கப்பட்ட ஒரு பெண் பத்திரிக்கையாளர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததுதான் தற்போது தமிழகத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தன்னிடமும் வைரமுத்து பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அவர் பற்றி எல்லாருக்கும் தெரியும்; நிறைய பாடகிகள் இதை அறிவார்கள். அவர் இப்படித்தான்; என்கிற பொருள்பட கருத்துப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் பற்றிக் கொண்டது.

vairamuthu about  chimayi harrasment complient

மேலும் அவர் 2004-ல் ஸ்விட்சர்லாந்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக `வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும் மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டு, என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்கச் சொன்னார்கள்.

பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னை மட்டும் அழைத்தார்கள். அழைத்தவர்களின் வார்த்தைகளே நோக்கத்தைக் காட்டியதால் நான் மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காக மிரட்டும் தொனியிலும் வார்த்தைகளை எதிர்கொண்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

vairamuthu about  chimayi harrasment complient

இதற்கிடையில், ஸ்விட்சர்லாந்தில் நடந்த நிகழ்ச்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுரேஷ் என்பவர் மறுத்திருக்கிறார். அந்த சுரேஷ் வைரமுத்துவுக்கு நெருக்கமான நண்பர்; வைரமுத்துவின் விருப்பத்தின் பெயரிலேயே அந்த நிகழ்ச்சிக்கு சின்மயி அழைக்கப்பட்டார் என்றும் தகவல்கள் பரவின.

சின்மயி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறுவது நாகரீகமாகிவிட்டது என குறிப்பிட்டு உண்மைக்கு காலம் பதில் சொல்லும் என்றும், தன்மீது சுமாற்றப்பட்ட புகாரை முட்டிலும் மறுத்தார்.

vairamuthu about  chimayi harrasment complient

இந்நிலையில், தற்போது வீடியோ மூலம் பாலியல் புகார் குறித்து விளக்கம் கொடுத்துள்ள வைரமுத்து, தன் மீது, சுமற்றப்பட்ட  புகார்கள் பொய்யானவை என்றும், இதனை நிரூபிக்க தற்போது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், அதேபோல் தன் மீது சுமற்றப்பட்ட புகாரை சட்ட ரீதியாக சந்திக்கவும் தயாராக இருப்பதாகவும். நான் நல்லவனா? கெட்டவனா? என யாரும் முடிவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios