உலகத்தை புரட்டிப்போட்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 12,380 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 414 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 1,489 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் மனசாட்சி இல்லாத சிலர் இருசக்கர வாகனங்களில் வெளியில் சுத்திவை நாள்தோறும் பார்த்து வருகிறோம். அப்படி அரசின் உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றும் நபர்களை வீட்டிற்குள்ளேயே இருக்க வலியுறுத்தி திரைப்பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னதாக பிரபல நடிகர் வடிவேலு கண்ணீர் சிந்திய படி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.


அதில்,  "மனவேதனையோடும், துக்கத்தோடும், சொல்கிறேன்.. தயவுசெய்து அரசின் அறிவுரையை கேட்டு யாரும் வெளியில் கொஞ்ச நாளைக்கு  வர வேண்டாம். மருத்துவ உலகமே மிரண்டுபோய் உள்ளது. தங்களுடைய உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள் அனைவர் உயிரையும் காப்பாற்றிக் வருகிறார்கள்.


அதேபோல் காவல்துறை அதிகாரிகள் பலர் நம்மை பாதுகாக்க பணி செய்து கொண்டிருக்கின்றனர். நமக்காக இல்லை என்றாலும் நம்முடைய சந்ததிக்காக, நம் வம்சா வழியாக நாம் புள்ளகுட்டி, புருஷனை, காப்பாற்றுவதற்காக உயிரோடு இருக்க வேண்டும். அதனால் அசால்டாக இருக்க வேண்டாம். தயவு செய்து யாரும் வெளியில் வர வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் விட்டு கதறினார். 


இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

தற்போது கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை கண்டு மனம் நொந்து போன வடிவேலு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த முறை  வடிவேலு தனது சொந்தக்குரலில் பாடியுள்ள பாடல் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் மனிதர்கள் இயற்கைக்கு செய்த அநீதிகளையும், வைரஸாக வந்து கொரோனா மனிதர்களுக்கு பாடம் புகட்டியதையும் குறிப்பிட்டுள்ளார். வைகைபுயல் வடிவேலு உருக்கமாய் பாடிய பாடல் இதோ...