Asianet News TamilAsianet News Tamil

விலகி போகும் வடிவேலுவை விடாமல் துரத்தும் பிரச்சனை! 'பேய் மாமாவுக்கு' செக்!

வைகை புயல், வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருந்த 'பேய் மாமா' என்கிற படத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

vadivelu pei mama movie banned
Author
Chennai, First Published Mar 8, 2019, 3:53 PM IST

வைகை புயல், வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருந்த 'பேய் மாமா' என்கிற படத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

vadivelu pei mama movie banned

பல, காமெடி நடிகர்கள் கோலிவுட் திரையுலகில் நடித்திருந்தாலும், வடிவேலுவுக்கு அளவிற்கு இளஞர்கள் மனதில் இடம் பிடிக்க முடியுமா என்றால் அது சந்தேகம் தான். தற்போது மீம்ஸ் போடும் பல இளஞர்களுக்கு இவர் தான் ராஜா.

vadivelu pei mama movie banned

வடிவேலு, கடந்த 2017  ஆம் ஆண்டு இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில்,  'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

ஆனால் படம் துவங்கிய 10 நாட்களில் வடிவேலு படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாததால், படக்குழுவினருக்கும், வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் படத்திற்காக போடப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்புள்ள செட் வீணாகியது.

vadivelu pei mama movie banned

இந்த பிரச்சனை குறித்து, கடந்த ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தில்,  இயக்குனரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் புகார் அளித்தார். பலமுறை வடிவேலுவிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியும் வடிவேலு உடன்படாததால், அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 'பேய் மாமா' என்கிற படத்தில் மீண்டும் கதாநாயகனாக வடிவேலு நடிப்பதாக கூறி அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியானது. அது பற்றி அறிந்து தயாரிப்பாளர் சங்கம்,  இயக்குனரை அழைத்து பேசி படத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.vadivelu pei mama movie banned

இதனால் இனி வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை முடிக்காமல், வேறு படங்களில்நடிக்கவே முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஷங்கர் மற்றும் வடிவேலு இடையே சமாதானம் பேச அரசியல் தலைவர் சீமான் முயற்சித்து வருகிறாராம். விரைவில் 24ம் புலிகேசி படம் மீண்டும் தொடங்குமா? அல்லது தயாரிப்பாளர் நஷ்டத்தை வடிவேலு ஏற்று கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios