கடந்த ஆண்டு எப்படியுமே இருவரும் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, இம்சை அரசன் 24ம் புலிகேசி பட ஷூட்டிங்கை விரைவாக தொடங்கிவிடுவார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப் புயல் வடிவேலு. சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு “எனக்கு நடிக்க ஆசையாக இருக்கிறது என்றும் உடலிலும் தெம்பு இருக்கிறது என்றும் ஆனால் யாரும் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றும் கூறினார். மேலும் நீங்கள் அனைவரும் ஒரு வருடமாகத் தான் லாக்டவுனில் இருக்கிறீர்கள், ஆனால் நான் பத்து வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன்” கண் கலங்கியது ரசிகர்களை கதிகலங்க வைத்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வைகைப் புயல் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியையும், புகழையும் உருவாக்கி கொடுத்தது ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ திரைப்படம். முதல் பாகத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து, இம்சை அரசன் 24ம் புலிகேசி பட வேலை தொடங்கப்பட்டது. 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இயக்குநர் சிம்புதேவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வடிவேலு படத்திலிருந்து விலகினார். 

கோடிகளைக் கொட்டி செட் அமைத்து, படப்பிடிப்பை தயாரித்து வந்த ஷங்கர் இதனால் கடும் அதிருப்தி அடைந்தார். வடிவேலு திரும்ப நடிக்க வரவேண்டும், இல்லையெல் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். ஆனால் வடிவேலு இதற்கெல்லாம் மசியவில்லை. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்த தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு போட்டது. 

இந்நிலையில் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இறங்கினார். வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனையை பேசித் தீர்க்க முயன்று வந்தார். கடந்த ஆண்டு எப்படியுமே இருவரும் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, இம்சை அரசன் 24ம் புலிகேசி பட ஷூட்டிங்கை விரைவாக தொடங்கிவிடுவார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலுவை திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் உள்ள ரசிகர்களின் கனவில் மண் விழுந்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வந்த பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் ஷங்கர் பக்கம் பேசுவதாக வடிவேல் நினைக்கிறாராம். அதனால் மீண்டும் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வருவதாக காற்று வாக்கில் செய்தி கசிந்துள்ளது. இதனால் வடிவேலு மீண்டும் திரையில் தோன்றி மக்களை மகிழ்விப்பது சந்தேகமே என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.