’இன்னும் இரண்டே மாதங்களில் தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்குற அளவுக்கு எனது புதிய பட  அறிவிப்பு வெளியாகும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’என்று தனது ரசிகர்களுக்கு உற்சாக செய்தி ஒன்றை நடிகர் வைகைப்புயல் வடிவேலு நேற்று வெளியிட்டிருந்த நிலையில் ‘அப்பிடியெல்லாம் நடக்காது.நடக்கவும் விடமாட்டோம்’என்று பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மறுப்பு வெளியிட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள நடிகர் வடிவேலு, அதுதொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள், சமரசங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துடன் ஏற்பட்ட பிணக்குகளுக்கு கணக்கு முடித்து வைத்துவிட்டு தனது செகண்ட் இன்னிங்ஸ்க்காக ஃப்ரெஸ்ஸாக தயாராகி வருவதாகவும் சொல்லப்பட்டது . அதையொட்டி அவருடன் காமெடிக்காட்சிகளை விவாதித்து வந்த குட்டிக் காமெடியன்கள் மீண்டும் வடிவேலு அலுவலகத்துக்கு ரெகுலராக ஆஜராக ஆரம்பித்திருந்தார்கள்.
அச்செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அவர் அளித்த பேட்டியில்,’கொஞ்ச நாள் அமைதியா இருப்போம் என்று நான்தான் நடிக்காம இருந்தேன். ஆனால், இந்த சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. ஒதுக்கவும் ஒதுக்காது. என்னை சார்ந்த எல்லோருக்கும் அது தெரியும். எனது அடுத்த பட வேலைகளை செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்போறேன். அந்த அறிவிப்பே ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதை கேட்டாலே, ஜனங்க ஜாலியாகிடுவாங்க. வலுவான கூட்டணி, அசத்தலான கதைக்களம், மிரட்டுற பர்ஸ்ட் லுக் என்று தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கறமாதிரி பிச்சு உதறப்போறோம்’ என்று கூறியிருந்தார். அப்படத்தை இயக்குநர் சுராக் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழுவை சேர்ந்த டி.சிவாவிடம் கேட்டபோது “இயக்குனர் ஷங்கருக்கான இழப்பீடு தொகையை வடிவேலு கொடுப்பதுவரை எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை வைத்து படம் எடுக்க முன்வர மாட்டார்கள்” என்ற பதிலோடு முடித்துக்கொண்டார். இதற்கு முன்பும் இதே ஆரவாரத்தோடு வடிவேலு துவங்கிய சக்தி ச்தம்பரம் படம் ஒன்றும் வெறும் அறிவிப்போடு நின்றது குறிப்பிடத்தக்கது.