வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வடசென்னை திரைப்படம் இன்று ரிலீசாக திரையரங்குகளில் மிரட்டலான வரவேற்பை பெற்றிருக்கிறது. வட சென்னை என்றாலே அடி தடி ரவுடியிசம் போன்றவை தான் ஹைலைட். அதை மையமாக வைத்து தான் இந்த படத்தினையும் இயக்கி இருக்கிறார் வெற்றிமாறன். 

இது வெறும் அடிதடி கதை இல்லை, அதன் பின்னால் ஓளிந்திருக்கும் அரசியலை வெளிச்சம் போட்டுக்காட்டும் கதை என்று , மக்கள் மனதில் உரக்க சொல்லி இருக்கிறது வட சென்னை படம் . 

படத்தில் வரும் ஒவ்வொரு நடிகர் நடிகையுமே கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்திப்போய் நடித்திருக்கின்றனர். ஒரு படம் பார்க்கும் உணர்வை விட யதார்த்தமான வடசென்னை வாழ்க்கையை பார்க்கும் உணர்வையே மேலிட செய்கிறது இந்தப்படம். படத்திற்கானா கதையில் அழுத்தமான வரலாற்று நிகழ்வுகளையும் அதன் பின்னணியில் நடந்த சம்பவங்களையும் உடைத்து சொல்லி இருக்கிறார் வெற்றி மாறன். 

ராஜீவ்காந்தி கொலை நடந்த போது அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவிய சூழல் மற்றும் பின்னணிகளும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அரசியல் பேசும் படம் என்று பல படங்களை பற்றி முன்னதாகவே அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பல சர்ச்சைக் காரணிகளை தைரியமாக இந்த படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் வெற்றிமாறன்.


இரண்டு ரவுடிகள் இணைந்து செய்யும் ஒரு கொலை ..அதனை தொடர்ந்து அவர்கள் தனித்தனியாக பிரிந்து தங்களுக்கு என ஒரு சாம்ராஜ்ஜியத்தை

உருவாக்கிக்கொண்டு ஒருவரை ஒருவர் கொல்ல துடிக்கும் வன்மம் என தொடரும் இந்த பயணத்தில், கேரம் விளையாட்டில் சாதிக்கத்துடிக்கும் ஒரு இளைஞன் எப்படி மாட்டிக்கொள்கிறார். அதன் பின்னர் அந்த இளைஞனின் வழ்க்கையில் நடக்கும் மாற்றம் என்ன ? அதன் பின்னணியில் பின்னிப்பிணைந்திருக்கும் அரசியல் என்ன? இது தான் கதை …. 

இந்த கதையை எவ்வளவு யதார்த்தமாக சொல்ல முடியுமோ அவ்வளவு யதார்த்தமாக , அதே சமயம் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் சொல்லி இருக்கிறார் வெற்றிமாறன்.இதில் இப்போது இருக்கும் ஆளும் கட்சியின் கடந்த காலத்தையும் இவர் தைரியமாக  பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் எம்ஜிஆர் மரணத்தின் போது நடந்த சில நிகழ்வுகளையும் இந்த படத்தில் இணைத்திருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் தணிக்கை குழு சில பல காரணங்களால் அதனை நீக்கி இருக்கிறது. எம்.ஜி.ஆர் உடலை கொண்டு செல்லும் போதுஅந்த வண்டியில் இருந்து ஜெயலலிதா இறக்கிவிடப்பட்ட காட்சியின் வீடியோ இந்த படத்தில் இணைக்கப்பட்டிருந்திருக்கிறது. அதனை தான் நீக்கி இருக்கிறது தணிக்கை குழு.

அதே சமயம் கதைக்கு வலு சேர்க்கும் படையான சில வசனங்களில் வரும் பீப் வசனங்களை கதையின் தேவை அறிந்து நீக்காமல் ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது தணிக்கை குழு.  மொத்தத்தில் அரசியலில் சிலர் முன்னேறிட, அவர்களுக்காக போராடிட ஒரு முரட்டுக்கூட்டம் எவ்வாறு உருவானது உருவாக்கப்பட்டது என்பது தான் வட சென்னை படத்தில் வார்த்தைகளால் சொல்லப்படாத உண்மை…