’வட சென்னை’ இன்று சென்னையில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகளாக ரிலீஸாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதில் ஹீரோவாக நடித்திருக்கவேண்டிய சிம்பு தனுஷுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். 

கடந்த இரு வாரங்களாகவே ‘வட சென்னை’ படத்தை சிம்பு எப்படி தனுஷுக்கு தாரை வார்த்தார் என்ற செய்திகள் அதிகமாக நடமாடியபோதும், அதுகுறித்து மூச்' விடாத சிம்பு, தனுஷுக்கும் படக்குழுவுவினருக்கும் தனது வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துள்ளார். சினிமாவைப்பொறுத்தவரை நீ எனக்கு எப்போதுமே எதிரிதான் எனும் பொருள்பட சிம்பு, 

’அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்’என்று தனது வாழ்த்து செய்தியை ட்விட்டர் மூலம் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.