’இன்று விஷால் லிங்குசாமி கூட்டணியின் ‘சண்டக்கோழி2’ ரிலீஸாகியிருந்தாலும் வலைதளங்களில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பதென்னவோ ‘வட சென்னை’ தான்.

வசூல் ரீதியாக படம் சூப்பர் ஹிட் என்றாலும் தியேட்டருக்கு வரும் பெண்கள் ஆபாச வார்த்தைகளுக்காக முகம் சுழிக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக அமீர், ஆண்ட்ரியா முதல் இரவுக்காட்சியில் அரை நிர்வாணக்கோலத்துடன் ஆண்ட்ரியா தோன்றும் காட்சிகளை தேவையில்லாமல் சென்சார் ஏன் அனுமதித்தது என்று கமெண்டுகள் முகநூல்களில் குவிகின்றன.

இதையொட்டி படத்தின் இயக்குநர், நட்சத்திரங்களை விட அதிகம் வறுபட்டிக்கொண்டிருப்பது அவற்றை அனுமதித்த சென்சார்தான். படத்தோட புரடியூசர்களான லைகா நிறுவனத்துகிட்ட பல்க்கா பெட்டிகிட்டி எதுவும் வாங்குனீங்களா மிஸ்டர் சென்சார் என்று கேள்விகள் வருகின்றன.

சமீபகாலமாகவே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எடுத்த ஞானவேல் ராஜா போன்ற பெரிய தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட் பண்ணியும், சிறு படத்தயாரிப்பாளர்களிடம்  சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் கறார் காட்டியும் சென்சார் போர்டு பாரபட்சமாக  நடந்துகொண்டு வருவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில்  வெட்டவேண்டிய வன்முறைக்காட்சிகள், குட்ட வேண்டிய கெட்ட வார்த்தைகள்,  நறுக்கித்தள்ளவேண்டிய ஆபாசக் காட்சிகள், சாதிப்பிரச்சினைகளைத் தூண்டும் விவகாரங்கள் போன்றவற்றில் சென்சார் போர்ட் அதிகாரிகள் கவனமாக நடந்துகொள்ளவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.