இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாய் எகிறி போய் உள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் ரசிகர்களுக்கு பல இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார்கள். அதன் படி, இந்த படத்தில் இருந்து 'வாத்தி கம்மிங் ஒத்து' என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

அனிரூத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை, நாகேஷ் அஜிஸ், திவ்யா குமார், மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். விவேக் இந்த பாடலுக்கு லிரிக்ஸ் எழுதியுள்ளார்.

எப்போது புதிய வார்த்தைகளை தேர்வு செய்து பாடல் வரிகள் எழுதும் இவர், இந்த முறையும் அதே முயற்சியை கையாண்டு உள்ளார் என்பது, நன்றாக தெரிகிறது. வாத்தி கம்மிங் ஒத்து, பாடலில் இடம்பெற்றுள்ள, பிளாம்பி, பிளு..  பிளு...  பிளு..., சில்பி தொட்டா, தகர உட்டா போன்ற வார்த்தைகள் கேட்பதற்கே புதிதாக உள்ளது.

வாயில் நுழையாத பல பாடல்கள் சமீப காலமாக வெளியாகி வரும் நிலையில், இந்த பாடலும் அதே லிஸ்டில் இடம்பெறுகிறது. மேலும் இந்த பாடலில், தளபதி டான்ஸ் ஆடாத குறையை தீர்த்து வைத்துள்ளார் அனிரூத்து, ஒரே ஸ்டெப்பை திருப்பி திருப்பி போட்டாலும் செம்ம மாஸாக பாடல் வந்துள்ளது. பின்னணி இசையும் தெறித்து சிதறுகிறது.

3 நிமிடம் 54 நொடிகள் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடலில், வாத்தி ஒத்து என்கிற வார்த்தை மட்டும் மொத்தம் 30 நொடிகள் உள்ளது. மற்ற வார்த்தைகளை தொடர்ந்து, இசை மட்டும் 2 நிமிடம் 54 நொடிகள் இடம்பெற்றுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள 'வாத்தி கம்மிங் ஒத்து' பாடல் இதோ...