இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தற்போது விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியாக இருந்த இந்த திரைப்படம், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என போடப்பட்ட, ஊரடங்கு உத்தரவின் காரணமாக, வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சறுத்தல், மேலும் அதிகரித்து வருவதால்... மே 3 ஆம் தேதி வரை தற்போது ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் மாதம் 'மாஸ்டர்' படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், மே மாதம்,  தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டாவது, படம் ரிலீஸாகுமா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

'மாஸ்டர்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தன்னுடைய சாதனை பட்டியலை, வாத்தி கம்மிங் பாடல் மூலம் தொடங்கியுள்ளது. அதன்படி,  யூடியூபில் வெளியாகியுள்ள வாத்தி கம்மிங் லிரிக்கல் பாடல், இதுவரை 1 மில்லியன் லைக்குகளை குவித்து சாதனை செய்துள்ளது. இதனை விஜய்யின் ரசிகர்கள் #VaathiComingHits1MLikes என்கிற ஹாஷ்டாக்கில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.மிக குறுகிய காலத்தில் 1 மில்லியன் லைக்குகளை பெற்ற தளபதியின் 7 ஆவது வீடியோ பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் இந்த படத்தில், நடிகை மாளவிகா மோகன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் கௌரி கிஷன், விஜய் டிவி தீணா, சாந்தனு , உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார்.