நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள, 'வாடிவாசல்' படத்தின் ஹிந்தி உரிமை, ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள, 'வாடிவாசல்' படத்தின் ஹிந்தி உரிமை, ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களுக்கும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்தது. குறிப்பாக ஆஸ்கர் போட்டியில் பங்கேற்று, 100 படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டும்... விருதை வாங்காமலேயே வெளியேறியது.

அடுத்ததாக சூர்யா நடித்து வரும் 'ஜெய்பீம்' மற்றும் 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படப்பிடிப்பு முடிந்த பின்னர் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்ள உள்ளார். சமீபத்தில் கூட 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படத்தின் ஹிந்தி உரிமை ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே விற்பனை ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். வி கிரியேஷன் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

சமீப காலமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டாலும்... ஆன்லைனில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனினும் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே இந்த படத்தின் ஹிந்தி உரிமை விற்பனையாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகினரை வாய் பிளக்க வைத்துள்ளது.
