ஒருவன் இறப்பிற்கு வரும் கூட்டமே அவன் வாழ்க்கையை சொல்லும் என டயலாக் சொன்ன அஜித் . இதை வைத்தே எஸ்.பி.பி மரணத்திற்கு போகாத அஜீத்தை வைத்து வம்பிற்கிழுத்து வருகிறார்கள் விசிலடித்தான் குஞ்சுகள். 

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு நெருக்கமான நடிகர்களில் ஒருவரான அஜித், உடலுக்கு அஞ்சலி செலுத்த வராததோடு, இரங்கல் அறிக்கை கூட வெளியிடாதது சில நாட்களாக சலசலக்கப்பட்டு வருகிறது. அஜித்தும், எஸ்.பி.பி.யின் மகனான சரணும் ஆந்திராவில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அஜித் விளம்பரங்களில் நடித்து வந்த போது சென்டிமென்ட்டுக்காக சரணின் உடைகளையும், ஷூவையும் அணிந்து கொள்வார் என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் எஸ்.பி.பி. தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அஜித் தானாவே கடுமையாக உழைத்து, எந்த பின்புலமும், பரிந்துரையும் இல்லாமல் சினிமாவில் சாதித்து காட்டியதாக குறிப்பிட்டிருக்கிறார். அவரது ரசிகர்களை தொடர்ந்து இதனையே கூறி வருகின்றனர். ஆனால் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்பி பாலசுப்ரமணியம், அஜித்தை தான் தான் முதன் முதலில் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகம் செய்ததாக கூறியது, அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரிடம் அஜித்தை தான் அறிமுகம் செய்து வைத்ததாக அந்த பேட்டியில், எஸ்பி பாலசுப்ரமணியம் குறிப்பிட்டிருந்தார். அஜித் நடித்த உல்லாசம் படத்திலும் எஸ்.பி.பி. நடித்திருந்தார். அஜித் நடித்த படங்களில் இடம்பெற்ற பல ஹிட் பாடல்களையும் எஸ்.பி.பி. பாடியுள்ளார். பொதுவாக அஜித் பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார் என சொல்லப்பட்டாலும், சிறுவயதில் இருந்தே நல்ல உறவு முறையில் இருந்த, தான் சினிமாவில் அறிமுகமாக காரணமான எஸ்.பி.பியின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ளாதது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் எஸ்பிபி குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அஜித் தனது இரங்கலை தெரிவித்தாரா என தெரியவில்லை. அதே நேரம் அதுபோன்ற தகவலும் கூட இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன், தனது சமூக வலைதளப் பக்கத்தில், ’’விஜய்யை விட எஸ்பிபியால் அதிக பலன் அடைந்தவர்கள் அவரது இறுதிச் சடங்கிற்கு செல்லாத நிலையில் விஜய் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது’’என்று குறிப்பிட்டிருந்தார். 

இதில் அவர் அஜித்தை தான் மறைமுகமாக தாக்குவதாக நினைத்துக்கொண்டு அஜித் ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். திரையுலகை சேர்ந்தவர்கள் பலர், எஸ்.பி.பி.,யால் தான் அஜித்துக்கு முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது என்றும், அதுமட்டுமின்றி எஸ்.பி.பி.,யின் மகன் சரண், அஜித்துக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்றும், அவ்வாறு இருந்து அஜித் எஸ்பிபியின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒரு இரங்கல் அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் இது குறித்து விளக்கமளித்து வருகின்றனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள இந்த நேரத்தில் மாஸ் நடிகர்கள் நேரடியாக இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்றால் எஸ்.பி.பி.,யின் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் ரசிகர்களால் தர்மசங்கடம் ஏற்படும் என்றும், அதனை தவிர்ப்பதற்காகவே ரஜினி, கமல் உள்பட பல பிரமுகர்கள் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்குச் செல்லவில்லை. அந்த வகையில் அஜித்தும் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்று இருந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்திருக்கலாம் என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவே அஜித் இறுதி சடங்கிற்கு செல்லாமல் இருந்திருக்கலாம் என்று அஜீத் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எஸ்பிபியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட விஜய்யை பாதுகாப்பாக அனுப்பி வைக்க காவல்துறையினர் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை வீடியோ மூலம் அனைவரும் தெரிந்து கொண்டோம் என்பதையும் உணரவேண்டும். அத்தோடு முக்கியமான விஷயம்,. துக்க, சந்தோஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. திடீர் சம்பவங்களில் பங்கெடுக்க முடியாததற்கு அவரவர் சூழல், சந்தர்ப்பத்தையும் பொறுத்திப் பார்க்க வேண்டும். 

வராததை மட்டுமெ பெருங்குற்றமாக கருதக் கூடாது. அதேவேளை சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதனை தங்களுக்கு சாதகமாக்கி அரசியல் செய்யும் நோக்கில் பலரும் பல சம்பங்களில் கலந்து கொள்கின்றனர். அப்படிப்பட்ட சம்பவங்களுக்கு நிறைய நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டாக கூறலாம். விஜய் கலந்து கொண்டால், அந்த நிகழ்ச்சியில் அஜீத் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது..? இது கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளை. இந்த நேரத்தில் அந்த தொற்றை சமூக இடைவெளி விட்டு விரட்டியடிக்க வேண்டிய நிலையில் தான் வதால் கூட்டம் கூடும். அதனால், சமூகத்திற்கு பாதிப்பு வரக்கூடும் என்று எண்ணி அஜித், எஸ்.பி.பி இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதை தவிர்த்து இருக்கலாம்.

இந்த விவகாரத்தை பெரிதாக்குபவர்கள் யார்..? விஜய் ரசிகர்கள். ‘’எங்கள் தளபதிக்கு இருக்கும் குணத்தை பார்த்தீர்களா? அவர் மீது மரியாதை கூடுகிறது. ஆனால் அஜீத் வராமல் தவிர்த்ததை எப்படி ஏற்றுக்கொள்வது என காழ்ப்புணர்ச்சியை விதைக்கிறார்கள். மரணத்தில் அரசியல் லாபம் தேடுபவர்கள் மனிதர்களாகவும், ரசிகர்களாவும் இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்வார்களா இந்த ’விஜயிலடிச்சான் குஞ்சுகள்’?

 

அதுமட்டுமன்றி எஸ்பிபியின் குடும்பத்தினருக்கு அஜித் கண்டிப்பாக போன் மூலம் இரங்கல் தெரிவித்து இருப்பார் என்றும் மற்றவர்கள் போல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து விளம்பரம் தேடும் பழக்கம் உள்ளவர் அஜித் அல்ல என்றும் அஜீத் ரசிகர்கள் சமாதானம் கூறி வருகின்றனர். 

முழுக்க முழுக்க விளம்பரமும், மார்க்கெட்டிங்கும் சூழ்ந்துள்ள இந்த விளம்பர உலகில் இரங்கல் தெரிவிப்பதில் கூட தன்னை விளம்பரப்படுத்தி கொள்பவர்கள் அதிகம் இருக்கும் நிலையில் எதிலும் விளம்பரம் தேடாமல் இருக்கும் அஜித் மீது இவ்வகையான விமர்சனங்கள் எழுவதில் வியப்பில்லை என்றும் அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.