பிரபு தேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படத்திலிருந்து வெளியாகியுள்ள உதிரா உதிரா பாடல் ட்ரெண்டாகி வருகிறது. 

நடன இயக்குனரும் ,நடிகருமான பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து வெளியான சார்லிசாப்ளின் 2 மிதமான வெற்றியை ஈட்டி கொடுத்திருந்தாலும் அந்த படத்திலிருந்து வெளியாகியிருந்த ஏ மச்சான் பாடல் பட ரிலீசுக்கு முன்னமே ட்ரெண்டாகி இருந்தது. பிரபு தேவா நாயகனாக நடித்துள்ள ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் பஹிரா என்னும் ஹாரர் மூவி, அர்ஜுன் எம்,எஸ் இயக்கத்தில் எங் மாங் சங், எம்.எஸ் இயக்கத்தில் ஊமை விழிகள் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் தற்போது ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திநடன இயக்குனரும் நடிகருமான வாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து இப்படத்தை நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்திலிருந்து உதிரா உதிரா பாடல் வீடியோ தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

Scroll to load tweet…