கோலிவுட், பாலிவுட் என அனைத்து திரைப்பிரபலங்களுக்கும் அவர்களை தனி தன்மையோடு எடுத்துக்காட்டுவது, அவர்களுடைய பட்டம் தான். இப்படி தங்களுடைய பெயர்களுக்கு முன் ஏதாவது ஒரு பட்டதை வைத்துக்கொள்வது நடிகர்களின் கௌரவமாக பார்க்கப்படுகிறது என்று கூட கூறலாம். 

விஜய் சேதுபதி:

அந்த வகையில் மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தரமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் விஜய் சேதுபதி. இவருக்கு மக்கள் செல்வன் என்கிற பட்டத்தை தர்மதுரை மூலம் கொடுத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. இந்த பெயர் இவருக்கு நிலைத்து விட்டது. 

உதயநிதி:

இதனையடுத்து இயக்குனர் சீனு ராமசாமி... சமீபத்தில் 'கண்ணே கலைமானே' படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு தன்னுடைய  டுவிட்டரில் கூறியிருப்பதாவது 'கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை ,மக்கள் அன்பன், என்றே அழைக்கத் தோன்றியது' என்று கூறியுள்ளார்.

எனவே விஜய்சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' பட்டம் நிலைத்தது போல் உதயநிதிக்கு 'மக்கள் அன்பன்' என்ற பெயர் நிலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் உதயநிதி தற்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த பட்டம் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.