பல வருடங்களுக்கு முன்பு தன்னுடைய அப்பா விஜயகுமார் மற்றும் அம்மா மஞ்சுளா ஆகியோரை சமூக வலைதளங்களில் தரக்குறைவாக பேசி ரசிகர்களிடையே மிகவும் பரபரப்புக்குரிய ஒருவராக மாறினார் நடிகை வனிதா.

இதனையடுத்து இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியிலும் வனிதா சர்ச்சைக்குரிய ஒருவராகவே வலம் வந்தார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனால் வனிதா தனக்கென தனியாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த யூடியூப் சேனல் செயல்பட பேருதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாதது பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதுபோன்று வனிதா அடுத்தடுத்து தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். இப்படியான நிலையில் இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனக்கு ஒரு கிப்ட் அனுப்பியது போல புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்தில் இது சைனாவில் உருவான பொருள், சானிடைசரிங் செய்து பயன்படுத்தவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டார்? ஏன் வெளியிட்டார்? என்பது குறித்த விவரங்களை வனிதா தான் தெரியப்படுத்த வேண்டும்.