வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படங்கள் என்றாலே, தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மகதீர், பாகுபலி, அருந்ததி போன்ற திரைப்படங்களே அதற்கு சான்று.

அதிலும் பாகுபலி உலக அளவில் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தி இருந்தது. அதனை தொடர்ந்து தெலுங்கில் தயாராகி வரும், வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படம் தான் ”சாயி ரா நரசிம்ம ரெட்டி”.

இந்த திரைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பொதுவாக ஒரு திரைப்படம் திரைக்கு வந்த பிறகு தான் வெற்றியா? தோல்வியா? என தெரிய வரும். ஆனால், இந்த திரைப்படம் திரைக்கு வரும் முன்பே வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்காக செலவு செய்யப்பட்ட, ஒட்டு மொத்த பணமும் படம் ரிலீசாகும் முன்பே தயாரிப்பாளருக்கு கிடைத்திருக்கிறது.

இந்த படத்திற்கான ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரிலீஸ் உரிமை மட்டும்,  150 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ரிலீசுக்கு பிறகு இப்படத்தின் தயாரிப்பாளர் ராம் சரணுக்கு, இன்னும் பல மடங்கு லாபம்  கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.