Master unseen video : மாஸ்டர் வெளியாகி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் படப்பிடிப்புக்கு பின்னால் நடைபெற்ற க்யூட் மூமண்டை விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்த, 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வெளியானது. வெளியான இரண்டே நாட்களில், சுமார் 200 கோடி வசூலித்து சாதனையை படைத்தது. பின்னர் பிரபல ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக செம்ம ஸ்டைலிஷ் வாத்தியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் விஜய். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் முரட்டு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி தளபதிக்கு செம்ம டஃப் கொடுத்தார். எனவே விஜய்யின் நடிப்பை விட, விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எப்போது 'பவானியை' மையமாக வைத்து ஒரு படத்தை எடுப்பீர்கள் என்கிற கேள்விகளும் ரசிகர்களால் கேட்டகப்பட்டது. மேலும் தளபதி ரசிகர்களே... லோகேஷ் கனகராஜுக்கு இதுகுறித்து கோரிக்கை வைத்தனர்.

மேலும் விஜய் டிவி தீனா, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, ரம்யா, சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. 'மாஸ்டர்' படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரைடு என அனைத்து பாடல்களும், ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரவருக்கு பிடித்த வர்ஷனில் டான்ஸ் ஆடி வெளியிட்டு லைக்குகளை அள்ளினர்.

இது ஒரு புறம் இருக்க, வாத்தி கம்மிங் பாடல், 250 மில்லியன் ரசிகர்களால், யூடியூபில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளுக்காக விஜய்- விஜய் சேதுபதி தயாராகும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.மாஸ்டர் வெளியாகி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் படப்பிடிப்புக்கு பின்னால் நடைபெற்ற க்யூட் மூமண்டை விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.

View post on Instagram