உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியாவின் முன்னாள் கவர்னருமான, அர்னால்ட் மீது ஒருவர் பொது இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

71 வயதிலும், உடல் பயிற்சி குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் அர்னால்ட். இவர் தென் ஆப்ரிக்காவில் உள்ள உடல் பயிற்சி கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது, விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சில ஆலோசனை வழங்கி வந்தார்.

திடீர் என மர்ம நபர் ஒருவர், மிகவும் வேகமாக வந்து அர்னால்டை எகிறி அவருடைய முதுகில் உதைத்துள்ளார். இதைதொடந்து அர்னால்டுவின் பாதுகாவலர் அந்த நபரை அப்புறப்படுத்தினர். மேலும் இவரை போலீசார் கைது செய்ய வேண்டாம் எனவும், அவர் எட்டி உதைத்தால் தனக்கு எதுவும் ஆக வில்லை என அர்னால்டு சமூக வலைத்தளத்தில் பதில் கொடுத்துள்ளார். 

இந்த வீடியோ தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது: