ultimate star supports his director

அல்டிமேட் ஸ்டார் அஜீத் விவேகம் படத்திற்கு பிறகு, இப்போது ”விசுவாசம்” படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக அஜீத்தின் படங்களை இயக்கி வரும் சிறுத்தை சிவா தான், இந்த திரைப்படத்தையும் இயக்குகிறார். வீரம், வேதாளம், விவேகம் திரைப்படத்தை தொடர்ந்து, இப்போது ”விசுவாசம்” படமும் சிவாவின் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

விவேகம் திரைப்படம் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் திரில்லராக எடுக்கப்பட்டிருந்தாலும், எதிர்பார்த்த அளவு லாபத்தை தரவில்லை. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதிலும் சிறுத்தை சிவாவை ”விவேகம்” திரைப்படத்தையும், அவரையும் பலபேர் தொடர்ந்து கலாய்த்திருந்தனர்.

சில அஜீத் ரசிகர்களே இனி தயவு செய்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க வேண்டாம். என்றெல்லாம் அஜீத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இவ்விதமாக விவேகம் திரைப்படத்திற்காக சிவாவை கலாய்த்தவர்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக, அஜீத் தனது நண்பர்களிடம் பின் வருமாறு தெரிவித்திருக்கிறார்.

சிவாவை பற்றி குறை கூறும்யாருக்கும் அவரை பற்றி தெரியாது. எனக்கு சிவாவை கடந்த 8 வருடங்களாக நன்றாக தெரியும். நாங்கள் இணைந்து இதுவரை பணியாற்றிய படங்களில் இருந்து, நான் அவரை பற்றி அறிந்து கொண்டது இது தான். அவருக்கு சினிமா தான் முக்கியம் அவரது கவனம், கருத்து எல்லாம் சினிமாவை பற்றி மட்டும் தான். அத்தனை ஈடுபாடு அவருக்கு சினிமா மீது. அவரை பற்றி தெரியாதவர்கள் இவ்வாறு கூறுவது சரியல்ல. என அவர் தெரிவித்திருக்கிறார்.