இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. கமலின் 237வது படம்.. இயக்கப்போவது யார் தெரியுமா? ஆண்டவர் வெளியிட்ட அறிக்கை!
Kamalhaasan 237 Announcement : உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது கல்கி மற்றும் Thug Life ஆகிய இரு திரைப்பட பணிகளை மும்முரமாக கவனித்து வரும் நிலையில், தனது 237-வது திரைப்படம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1960ம் ஆண்டு வெளியான "களத்தூர் கண்ணம்மா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று இந்திய சினிமாவின் முகமாக மாறி உள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "விக்ரம்" திரைப்படம், உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான திரைப்படமாக மாறியது என்று கூறினால் அது மிகையல்ல.
கடந்த 63 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல், இந்திய திரை உலகையே தனது திறமையால் ஆட்சி செய்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது தொடர்ச்சியாக தனது திரைப்படங்களை அடுக்கி வருகிறார். அவரது நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், அடுத்தடுத்து திரைப்படங்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவங்க வயசு 50ன்னு சொன்னா யாரு நம்புவா..? இளம் நாயகிகளுக்கு ஈகுவலாக கிளாமரில் அசத்தும் மலைக்கா அரோரா!
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அடுத்தடுத்து தனது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்து வரும் உலக நாயகன், வினோத் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
அதேபோல சுமார் 36 ஆண்டுகள் கழித்து பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களுடன் "Thug Life" என்ற திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த சூழலில் அவருடைய 237வது திரைப்படம் குறித்த ஒரு அறிவிப்பை இப்பொழுது அவரே வெளியிட்டிருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒரு அதிரடி திரைப்படமாக இது உருவாக உள்ளது.
மேலும் அவரது இந்த 237வது திரைப்படத்தை தனது ராஜ்கமல் நிறுவனமே தயாரித்து வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உச்சகட்ட அறிவிப்பாக இந்த திரைப்படத்தின் இயக்குனர்களாக பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பு மற்றும் அறிவு ஆகிய இருவரும் தன்னுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார் ஆண்டவர். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.