Udhayanithi stalin join hands with namitha to next film

மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள அடுத்த படத்தில் ஜோடியாக மலையாள நடிகை நமீதா பிரமோத் நடிக்க இருக்கிறார்.

பகத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான “மகேஷிண்ட பிரதிகாரம்” படம், சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது.

மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் தமிழ் ரீமேக்கை, பிரபல இயக்குநரான பிரியதர்ஷன் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உதயநிதி ஸ்டாலின் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகி வேடத்திற்கு மலையாள நடிகையான நமீதா பிரமோத் நடிக்க இருக்கிறாராம்.

தமிழில் ’என் காதல் புதிது’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த நமீதா, மலையாளத்தில் டிராபிக், விக்ரமாதித்யன், அமர் அக்பர் அந்தோணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.