உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து முடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஒரே நாளில் வெளியிடப்பட உள்ளது. அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நெஞ்சுக்கு நீதி’. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இதை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

உதயநிதி முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இதில் நாயகியாக கருப்பன் பட நடிகை தன்யா நடித்துள்ளார். மேலும் மயில்சாமி, சரவணன், ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ், இசையமைத்துள்ள இதற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. அதன்படி சமூக ரீதியான பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருப்பது தெரிந்தது. அந்த டீசரில் இடம்பெற்ற மாஸ் பீஜியம் மனதை வருடும் விதமாக இருந்தது. அதோடு நீதிக்காக போராடும் காவலராக உதயநிதி வரும் இந்த படத்தில் சாதி ரீதியான எதிர்ப்பு குரல் அதிகமாக காணப்படுகிறது. எம்.எல்.ஏ ஆகியுள்ள உதயநிதியின் மிகுந்த துணிச்சல் சமூக உண்மை சம்பவ கதையில் நடித்திருப்பது ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது..

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 9 -ம் தேதி நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர்- சாங்ஸ் மாலை 6.30 க்கு லஞ்ச் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த படம் மே -20 -ம் தேதி வெளியாகவுள்ளது.
