Udhayanidhi Stalin : பாக்ஸ் ஆபிஸில் கிங்காக வலம் வரும் விக்ரம் படம் குறித்து அதனை தமிழகத்தில் வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.

கமல் நடிப்பில் கடந்த ஜூன் 3-ந் தேதி ரிலீசான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில், செம்பன் வினோத், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் இரண்டு வாரங்களை கடந்தும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.

உலகளவில் வெளியிடப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும், நடிகர் சூர்யாவுக்கு ரூ.46 லட்சம் மதிப்புள்ள ரோலெக்ஸ் வாட்ச் ஆகியவற்றை பரிசாக அளித்தார் கமல்.

விக்ரம் திரைப்படம் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருவதன் காரணமாக இந்த வாரம் வெளியாக இருந்த அருண்விஜய்யின் யானை திரைப்படம் ஜூலை 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு பாக்ஸ் ஆபிஸில் கிங்காக வலம் வரும் விக்ரம் படம் குறித்து அதனை தமிழகத்தில் வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.

Scroll to load tweet…

அதன்படி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் உதயநிதியின் அந்த டுவிட்டுக்கு லைக்குகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Jailer : ரஜினியை ‘ஜெயிலர்’ ஆக்கிய நெல்சன்... தலைவர் 169 படத்தின் அதகளமான அப்டேட் வந்தாச்சு