நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணே கலைமானே’ படத்திற்கு சர்வதேச படவிழாவில் கெளரவ விருது கிடைத்துள்ளது. 

மண் சார்ந்த, யதார்த்தக் கதைகளை படமாக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து, 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இந்த படம் வெளியானதில் இருந்தே தொடர்ந்து பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உங்கள் தேவை இங்கே இருக்கு..! ஆனால் உங்க படத்தில் நடிக்க என்னை கூப்பிடாதீங்க... கங்கானாவின் அதிர்ச்சி பதிவு!

அந்த வகையில் ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது. மேலும், சிறந்த திரைப்படத்திற்காக அமெரிக்க சோகால் விருதையும் வென்றது. 

விவாகரத்தான வில்லி நடிகையுடன் தீரா காதலில் சன் டிவி சீரியல் ஹீரோ! வைரலாகும் ரொமான்டிக் போட்டோஸ்!

இதனையடுத்து, தற்போது ஜெய்பூரில் 9 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் (JIFF) இந்தப் படம் திரையிடப்பட்டது. மேலும், ஃபீச்சர் ஃபிக்‌ஷன் பிரிவில் இந்தப் படத்திற்கு கெளரவ விருது வழங்கப்பட்டுள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.