ஒரு புளிச்ச மாவு மேட்டரில் இரண்டு சாத்துக்கள் வாங்கிவிட்டு இலக்கிய உலகின் நேசமணி போல் ஒரே நாளில் ஒலகப்புகழ் அடைந்துவிட்டார் ஆசான் ஜெயமோகன்.இந்த உப்புபெறாத மேட்டர் குறித்து இணையம் முழுக்க நேற்று முடி பிளக்கும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, ஜெயமோகனுக்கு ஆதரவாக இரண்டு தமிழக எம்பிக்கள் போலீஸுக்குப் போனதும் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.

இயக்குநர் கவிதா பாரதி தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து எழுதியுள்ள ஒரு பதிவில்,...ஒரு மனுசன் சின்ன மளிகைக்கடை நடத்தறாரு..
கல்லாவுல அவரு மனைவி இருக்காங்க..

ஒருத்தர் வந்து மாவு பாக்கெட் கேக்கறாரு..
புது மாவு வரல சார், பழைய மாவுதான் இருக்குன்னு அந்தம்மா சொல்றாங்க..
பரவால்ல குடுங்கன்னு அந்த சார் வாங்கிட்டுப் போறாரு..

அதுக்கப்புறம் என்ன பிரச்னையோ,
அதே சார் வந்து அந்த மாவுப் பாக்கெட்டை அந்தம்மா மேல வீசி தகராறு பண்றாரு..
அவங்க முடியைப் புடிச்சு இழுத்து அடிக்கறாரு..

அந்தம்மா காவல்துறை புகார் கொடுக்கறாங்க..
ஆனா அவங்க புகாரை ஏத்துக்கல..
காயம்பட்ட அந்தம்மா மருத்தவமனைல அனுமதிக்கப்படறாங்க..

அதுக்கப்புறம் விழுப்புரம் எம்.பி. தலையிட்டு அந்த சாரை சும்மாவாச்சும் அரசு மருத்துவமனைல அட்மிட் ஆகச் சொல்றாரு..
தன் செல்வாக்கால் மளிகைக்கடைக்காரரை கைது பண்ண வெக்கறாரு.. மதுரை எம்.பி. அந்த சாரை போனில் நலம் விசாரிக்கறாரு..
நாளைக்கு உள்துறை அமைச்சர்கூட மாவுத்தனுக்கு ஆதரவா வருவாரு..

ஆனா பாவப்பட்ட மளிகைக் கடைக்காரரு போலீஸ் பிடில இருக்காரு..
அந்தம்மா மருத்துவமனைல இருக்காங்க..

இதுல நீங்க யாரு பக்கம் நிப்பீங்க..

#

சும்மாவே சங்கூதற மனுஷ்ய புத்திரன் வந்து இந்த மனநோயாளிக்கா அந்த மனுசன் இவ்வளவு எழுதுனாருங்கறாரு..

உங்களைப் படிக்காதவனும், புடிக்காதவனும் பொம்பளைப்புள்ளைமேல கைய வெச்சா பொளந்துருன்னு தெளிவா இருக்கான்..

உங்களைப் புடிச்சவன்தான் எழுத்தாளர் அது இதுன்னு ஒளறிக்கிட்டிருக்கான்..

சரிப்பா.. இனிமே இந்த மனநோயாளிகளுக்கு நீங்க எதுவும் எழுதாதீங்க..
அப்படியாவது அவங்க நலம் பெறட்டும்..

#

ஏண்டா.. நெல்லைல ஒரு சாதி ஒழிப்பு கம்யூனிஸ்ட் களப்போராளி கொல்லப்பட்டான்..

கடன் வசூல் பண்ணப்போன பேங்க் ஆபீசர் கேவலப்படுத்துனதால
தேனில ஒரு விவசாயி தற்கொலை பண்ணிக்கிட்டாரு..

அதுக்கெல்லாம் எவனும் வெண்முரசு கொட்டல..
வந்துட்டானுக புளிச்ச மாவுக்கு 
பூச்சுத்தறதுக்கு..