17வது படம்I

இது கார்த்தியின் 17 வது படம்.தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து மக்களின் மனதை கசர்ந்தவர் ரகுல் பிரித் சிங். இதில் கார்த்தி ரகுலின் ஜோடி வெகுவாக பாராட்டப்பட்டது.இதையடுத்து கார்த்தியின் 17 வது படத்திலும் ரகுல் பிரித் சிங்கே கார்த்தியின் ஜோடியாக நடிக்கிறார்.

உதவி இயக்குநர்

இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா போன்றோர் நடிக்கின்றனர்.
ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்,எங்கேயும் எப்போதும் சரவணன் ஆர்.கண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார்.இது இவருக்கு முதல் படமாகும்.

ஹாரிஸ் ஜெயராஜ்

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.சிங்கம்2, மோகினி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ் லக்ஷமன் குமார் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்டுடன் இணைந்து தயாரிக்கிறார்.

அதிக பட்ஜெட்

இதன் படப்பிடிப்புகள் வருகிற 8 ம் தேதி துவங்குகிறார்.ஐதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது.இதுவரை கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் உள்ள படமாம்.