பிரபல நடிகர் மகேஷ் பாபு, அடுத்து நடிக்க உள்ள அவருடைய 26 ஆவது படத்தில், ஜோடியாக நடிக்க இரண்டு நடிகைகளை அணுகிய போது, இரண்டு நடிகைகளும் நடிக்க மறுத்துள்ளனர். இதனால் புதிய நாயகிக்கு வலை வீசி வருகிறது படக்குழு.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. இவரை போலவே 'கீதா கோவிந்தம்' பட நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

இதனால், முன்னணி நடிகர்கள் படங்களில் இவர்களை நடிக்க வைக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள். 

அந்த வகையில், அணில் ரவிப்புடி இயக்கத்தில், மகேஷ் பாபு நடிக்க உள்ள 26 ஆவது படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய்பல்லவியை அணுகிய போது... மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தன்னை தாறுமாறாக விமர்சித்து வருவதால் என்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். இதை அறிந்த சிலர் இதுலாம் ஒரு காரணமா என சாய்பல்லவியிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

மேலும் நடிகை ராஷ்மிக்கா தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால், கால்ஷீட் இல்லை என கூறி, மகேஷ் பாபு படத்திற்கு நோ சொல்லிவிட்டனர். இரண்டு நடிகைகளும் ஏமாற்றி விட அடுத்த நாயகியை தேடுவதில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.