ராபர்ட் பாட்டின்சன், கிறிஸ்டன் ஸ்டூவர்ட் ஆகியோர் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாம்பயர் திரைப்படமான  திரைப்படம் ட்வைலைட். அந்த படத்தில் நடித்ததன் மூலம் க்ரிகரி டைரீ பாய்ஸ் என்பவர் மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் டைலர் க்ரோலியாக பாய்ஸ் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் 30 வயது இளைஞரான பாய்ஸ் மற்றும் அவரது 27 வயது காதலியான நடாலி ஆகிய இருவரும் லாஸ் வேகாசில் உள்ள வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களது திடீர் மரணம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: காதலருடன் பிரேக் அப்?... நயன்தாராவை அடுத்து இளம் நடிகையை பாடாய் படுத்தும் காதல்...!

இந்நிலையில் பாய்ஸின் அம்மா லிசா வெய்ன் முகநூல் பக்கத்தில் உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.  என் மகன் அருமையாக சமைப்பார். சிக்கன் விங்க்ஸ் விற்பனை செய்யும் உணவகம் ஒன்றை தொடங்க ஆசைப்பட்டார். எனக்கு பிடித்த சமையல் கலைஞர் எனது மகன் தான். நடாலி அவருக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார். இருவரும் ஒன்றாக செயல்பட ஆசைப்பட்டார்கள். எனது வியாபாரத்தில் பங்கெடுக்க வேண்டுமென பாய்ஸ் ஆசைப்பட்டார். 

இதையும் படிங்க: செல்ஃபி எடுக்க போன இளம் நடிகையிடம்... சிம்பான்ஸி குரங்கு பார்த்த வேலையை நீங்களே பாருங்க....!

கடந்த செவ்வாய்கிழமை என்னை சந்தித்த போது கூட அதைப் பற்றி தான் பேசினோம். இனி நீங்கள் வேலை செய்ய வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். நீ இல்லாதை நினைத்து நான் வலியால் துடிக்கிறேன். எனக்கு ஏதாவது கவலை என்றால் உனக்கு தான் மெசேஜ் அல்லது போன் செய்வேன். நீ எனக்கு ஆறுதல் கூறி தேற்றுவாய். 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

ஏன் என்னை விட்டுச் சென்றாய். உன்னை நான் கடைசியாக அன்னையர் தினத்தன்று பார்த்தேன். எனக்கு சமைத்து கொடுத்தாய். சேர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தோம். என் கார் வரை வந்து வழி அனுப்பினாய். என் கன்னத்தில் முத்தமிட்டு ஐ லவ் யூ அம்மா என்றாய். இனி உன் குரலை கேட்கவே முடியாது. ஐ லவ் யூ என்று சொல்லமாட்டாய். என் இதயமே நொறுங்கிவிட்டது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.