நடிகை சபர்ணா மதுரவாயலில் அவர் வசிக்கும் அபார்ட்மெண்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இறந்து 3 நாட்களாக உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
சுகுணா என்ற பெயரை மாற்றி சபர்ணா என்ற பெயரை வைத்துகொண்டு திரைத்துறையில் நுழைந்தவர் சபர்ணா. ஆரம்பத்தில் டிவி ஆங்கராக இருந்தார். ஏராளமான டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

பின்னர் தெலுங்கு சானல்களில் அதிகம் தொகுப்பாளராக மாறினார். சமீபத்தில் மாயமோகினி என்ற மலையாள சீரியலில் நடித்து வந்தார். பின்னர் சினிமாத்துறையில் நுழைந்தவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். விஷால் நடைத்த பூஜை படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
இவர் மதுரவாயலில் ராஜிவ்காந்தி நகரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் இருந்த அபார்ட்மெண்டின் கதவு திறக்கப்படவே இல்லை.

இன்று திடீரென அவர் இருந்த அபார்ட்மெண்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் நிர்வாணமாக பிணமாக கிடந்தார்.

அவர் கை மணிக்கட்டு அறுக்கப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் இறந்திருக்கலாம் என தெரிகிறது. அவர் நிர்வாண நிலையில் கிடந்ததால் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

மர்ம மான இறந்து கிடந்த சபர்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
