ஓடும் பேருந்தில் நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த டிவி நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளம் பெண் தனியார் மலையாள டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் காசர்கோட்டில் நடக்கும் மாநில அளவிலான பள்ளி கலை விழாவில் கலந்துகொள்ள கொல்லத்தில் இருந்து ஒரு படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்தில் சென்றார்.  அதிகாலை என்பதால் அந்த பெண் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். 

அப்போது, பக்கத்து பெர்த்தில் படுத்திருந்த இளைஞர் ஒருவர் கையை வைத்து டிவி நடிகையின் அந்தரங்க உறுப்பில் கை வைத்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அலறியடித்துக் கொண்டு எழுந்த அவர் கூக்குரலிட்டார். சக பயணிகள் எழுந்து இதுதொடர்பாக விசாரித்தனர். சீரியல் நடிகை நடந்தவற்றை கதறியபடி கூறியுள்ளார்.

இதனையடுத்து, பேருந்து கோட்டக்கல் காவல் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், இளைஞரை பிடித்து விசாரித்தபோது அவர் காசர்கோட்டை சேர்ந்த முனவர் (23)  என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.