கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி தொடர் நடிகர்களின் மர்ம சாவு அதிகரித்து வருகிறது. நடிகர் சாய் பிரசாந்த், நடிகை சபர்ணா ஆகியோர் கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

போலீசார் இந்தத் தற்கொலை குறித்துத் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த மாதம் சரவணன் மீனாட்சி நடிகை 'மைனா' நந்தினியின் கணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சுமங்கலி’ தொடரில்  நடித்து வந்தவர் பிரதீப். இவர் ஐதராபாத்தில் வசித்து வந்தார். இவரது மனைவி பவானி ரெட்டியை சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பிரதீப் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது தலை, உடம்பில் காயங்கள் இருந்தன. போலீசார் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அவரது மனைவி பவானியிடமும் , வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினர் ஷிராவன் என்பவரிடம் விசாரித்து வந்தனர். பிரதீப் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் பிரதீப் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை. மேலும் தலை, உடம்பில் பெரிய காயங்கள் எதுவும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை. எனவே பிரதீப் தற்கொலை செய்து இருக்கவே வாய்ப்பு உள்ளது என போஸ்மாட்டத்தில் உள்ளது.

இதையடுத்து போலீசார் பிரதீப் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். வீட்டில் தங்கியிருந்த ஷிராவன் என்பவர் தொடர்பாக பிரதீப் - பாவனி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.