பிரபல டிவி நடிகரின் இரண்டு வயது மகள், பெற்றோரின் சிறு கவனக்குறைவால் மரணம் அடைந்துள்ள விஷயம் ரசிகர்களையும், பெற்றோரையும் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பான இடங்களில் விளையாடும் போது கூட பெற்றோர்கள் அவர்கள் மேல் ஒரு கண் வைத்து கொண்டே இருக்க வேண்டும். ஒன்றும் தெரியாத வயதில் அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என தெரியாது. குறிப்பாக சிறிய பொருட்கள் கூட பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் 'பியார் கி பாபட்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் பிரதீஷ் வோரா,  இவரின் இரண்டு வயது மகள் நேற்று சிறு அளவிலான பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

குழந்தை விளையாடுகிறது என பிரதீஷ் வோராவின் மனைவியும் அவருடைய வேலைகளில் கவனம் செலுத்தினார்.  இந்நிலையில் திடீரென்று தன் வைத்து விளையாடிய சிறிய அளவினான பொம்மை ஒன்றை வாயில் போட்டு முழுங்கியுள்ளது குழந்தை. இதனால் மூச்சுக் குழல் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் சில நிமிடங்களில் குழந்தையின் உயிர் பிரிந்தது.

இந்த சம்பவம் பிரதீஷ் வோராவின் ரசிகர்களை மட்டுமின்றி குடும்பத்தினரையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய குழந்தை மிகவும் ராசியான எனக் கூறி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரதீஷ் வோராவின் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.