true love should hurt physically too - director SA Chandrasekhar

பள்ளிப் பருவத்திலே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், “காதலில் எப்போதுமே அடி உதை வாங்கி காதலித்தால்தான் அது உண்மையான காதல்” என்றுத் தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம். இவர் “பள்ளிப் பருவத்திலே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

“கற்றது தமிழ்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் “பள்ளிப் பருவத்திலே” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இதில் பங்கேற்ற பிரபல இயக்குனரும். நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தப் படம் மிகவும் அழகான மென்மையான பள்ளிப் பருவத்துக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காதலில் எப்போதுமே அடி உதை வாங்கி காதலித்தால்தான் அது உண்மையான காதல்” என்று கூறினார்.