நடிகர் - நடிகைகள் வாழ்க்கையில் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. பல நடிகைகள் பட வாய்ப்பு தேடுவதற்கு கூட இதனை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இன்னும் சிலர், சமூகம் , அரசியல், மற்றும் தன்னுடைய சுய கருத்துக்களை வெளிப்படையாக வெளியிடுகிறார்கள். நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் இதில் பகிர்ந்து ரசிகர்களுடன் நேரடி தொடர்பிலும் இருக்கிறார்கள்.

இதனால் சிலர் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்திக்கின்றனர். சில நடிகைகளின் வலைத்தளங்களை விஷமிகள் ஊடுருவி முடக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. 

நடிகர் - நடிகைகளின் வலைத்தளங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். எனவே இதை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். அந்த வகையில் நடிகை திரிஷாவின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்வோர் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது.. இதுவரை எந்த தமிழ் நடிகைக்கும் இந்த அளவிற்கு பின் தொடர்வோர் எண்ணிக்கை இல்லை. எனவே முதல் முறையாக இந்த  சாதனையை திரிஷா  நிகழ்த்தியுள்ளர். இதற்காக அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.