தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும், அசைக்க முடியாத கதாநாயகியாக, கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் நேற்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதற்கு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் ட்விட்டர் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை மழையாய் பொழிந்தனர். த்ரிஷாவும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.

இந்நிலையில், இவரின் நெருங்கிய தோழியும், நடிகையுமான சார்மி. த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறி... அதற்கு தற்போது சட்டத்திலும் இடம் உள்ளது என சுட்டி காட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இவரின் இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இதை தொடர்ந்து, த்ரிஷா இவரின் திருமண ப்ரோபோசலுக்கு... எப்போதோ நான் சம்மதம் தெரிவித்து விட்டேன் என பதில் கொடுத்துள்ளார். இவர்கள் விளையாட்டிற்காக இப்படி பேசிக்கொண்டாலும், சமூகவலைதளவாசிகள் சிலர் இதற்கு தங்களுடைய கன்னடத்தை தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் பேச்சிலும் கவனம் தேவை என்பது த்ரிஷா ரசிகர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.