மணிரத்னத்துடன் ஜம்முனு அமர்ந்திருக்கும் குந்தவை...சோசியல் மீடியாவில் அனல் பறக்க விடும் போட்டோஸ்
இயக்குனர் மணிரத்தினத்துடன் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா ஹாயாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் நாளை திரைக்கு வரவுள்ளது. படம் குறித்த ஏகபோக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் விதமாக சமீப காலமாகவே படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்தது. அதோடு ப்ரமோஷனுக்காக முக்கிய நகரங்களுக்கு சென்ற படகு குழுவினர் குறித்த போட்டோக்களும் ட்ரெண்டாகின.
முன்னதாக வெளியான ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை பொறுத்து படம் நல்ல வசூலை குவிக்கும் என தெரிகிறது. அதேபோல நல்ல முன் பதிவு ஆகி உள்ளதாம். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் என நட்சத்திர பட்டாளங்கள் பலரும் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...மெல்லிய உடையில் மனதை மயக்கும் [பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா
கல்கி கிருஷ்ண முரீதியின் கனவு படமான சோழ வம்ச வரலாறு தழுவிய இந்த படத்தில் நம்ம ஊரு நாயகர்கள் சோழர்களாக வரும் காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினத்துடன் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா ஹாயாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.