'96 ' படத்தின் வெற்றிக்கு பிறகு, படு உற்சாகமாக, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் த்ரிஷா. தற்போது இவர் கைவசம், 'கர்ஜனை', 'பரமபத விளையாட்டு', 'சதுரங்க வேட்டை 2 ', 'ராங்கி' என நான்கு படங்கள் உள்ளது.  

இந்நிலையில் இவர், அஜித்தை வைத்து 'ஆசை', விஜய் - சூர்யாவை வைத்து 'நேருக்கு நேர்', ' கேளடி கண்மணி', 'பூவெல்லாம் கேட்டுப்பார்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த இயக்க உள்ள விளம்பர படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா.

இந்த விளம்பர படப்பிடிப்பின்போது இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.